கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால் ஆட்டோ ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்ததால் சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் முகித் என்ற 7 வயது மகனும், 5 வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளனர். முகித் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ரோகித் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நாள்தோறும் முருகவேல் தனது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அதேப் போல் மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.
குப்பநத்தம் கிராம சாலையில் சென்ற போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியதால், முருகவேல் நிலைத் தடுமாறி ஆட்டோவை திசை திருப்ப முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5வயதான ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்படது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ரோகித்தை மிட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.