Close Menu
    What's Hot

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»கோவை : தகாத உறவுக்கு இடையூறான குழந்தை… கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்…
    மாவட்டம்

    கோவை : தகாத உறவுக்கு இடையூறான குழந்தை… கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம் இருகூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுபதி-தமிழரசி தம்பதி. இவர்களுக்கு நான்கரை வயதில் அபர்ணாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தமிழரசி, தனது குழந்தை அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    அத்தோடு சமூக வலைதளத்திலும் தன்னை ஆக்டிவாக வைத்திருந்த தமிழரசி, கட்டட வேலைக்கும் சென்று வந்துள்ளார். அவ்வாறு கட்டட வேலைக்கு செல்லும் இடத்தில், சக ஊழியரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவருடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.

    இது குறித்து தகவலறிந்த போலீசார், தமிழரசியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். அப்போது அவர், அழுது கொண்டிருந்த குழந்தையை அடித்ததாகவும், அதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தமிழரசி அளித்த வாக்குமுலத்தில், “எனது கணவர் பிரிந்து சென்ற பின்னர் வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்த முடிவு செய்தேன். இதுகுறித்து அவரிடம் கூறியபோது, குழந்தை இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், தனியாக வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். இதனால் வேறு வழியின்றி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” எனக் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து வசந்தையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி… 3 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கல்…
    Next Article முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிரமடைந்த சோதனை…
    Editor TN Talks

    Related Posts

    ஆடிப்பெருக்கு…உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை…

    July 29, 2026

    சேலம் : சிறுத்தை பட பாணியில் மொட்டை அடிக்க வைத்த ஆசாமி..! ரூ.15,000 வரும் என நம்பி பெண்கள் ஏமாற்றம்..!

    July 28, 2026

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?

    மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.