Close Menu
    What's Hot

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»திமுக ஆதிக்கத்திற்கு செக்… தமிழக அரசியல் களத்தில் குதிக்கிறார் அமித் ஷா
    தேர்தல் 2026

    திமுக ஆதிக்கத்திற்கு செக்… தமிழக அரசியல் களத்தில் குதிக்கிறார் அமித் ஷா

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025Updated:December 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps amitsha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் நிலவும் திமுக ஆதிக்கத்திற்கு செக் வைக்கும் நோக்குடன் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விரைவில் தமிழகம் வரவிருக்கிறார். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிஹார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜக-வின் முழு கவனமும் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. சமீபத்தில் கூட கோவை வந்த பிரதமர் மோடி, “பிஹாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ என்று நினைக்கக் தோன்றுகிறது” என்று உற்சாகமானார். தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜக-வை சற்று யோசிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே, அதிமுக-வில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனும் நீக்கப்பட்டிருக்கிறார்.

    இதனால், அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கக்கூடிய வாக்குகள், சிதறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக-வை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனிடையே, ஓபிஎஸ்ஸை அமித் ஷா சந்தித்ததால், பாஜக தலைமை மீது பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஓபிஎஸ் – பழனிசாமி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித் ஷா திட்டமிட்டு வருகிறார். அந்தவகையில், பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்கிய பிறகு, அந்தக் கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வேலைகள் முடிந்த பின்பு, ஓரிரு வாரத்தில் அமித் ஷா தமிழகம் வருவார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தி திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் அமித் ஷா.

    கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. பல தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்குகளை விட திமுக குறைவான வாக்குகளையே வாங்கி இருந்தது. எனினும், வாக்குகள் பிரிந்ததால் திமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுபோன்ற நிலை வரக்கூடாது என்றும் அதற்காக திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறுவதைத் தடுக்க பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

    தமிழகம் வரும் போது, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷா தனது வருகையின் போது கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பார் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமித் ஷா சொல்படி ஆடுகிறாரா ஓபிஎஸ்? – டெல்லி பயணத்தில் விலகாத மர்மங்கள்
    Next Article அகமதாபாத் விமான விபத்து!. உடல்களில் ஆபத்தான அளவு விஷம்!. அதிர்ச்சியூட்டும் அறிக்கை!.
    Editor TN Talks

    Related Posts

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    July 18, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.