Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அமித் ஷா சொல்படி ஆடுகிறாரா ஓபிஎஸ்? – டெல்லி பயணத்தில் விலகாத மர்மங்கள்
    அரசியல்

    அமித் ஷா சொல்படி ஆடுகிறாரா ஓபிஎஸ்? – டெல்லி பயணத்தில் விலகாத மர்மங்கள்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnm import sites default files OPS PTI 230622 1200
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனிசாமியின் பிடிவாதத்தால் தனிக் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்த ஓபிஎஸ்ஸை அமித் ஷா அவசரமாக டெல்லிக்கு அழைத்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏகத்துக்கும் ஊகங்களை உலவ விட்டிருக்கிறது.

    மிகச் சாமானியனான தன்னை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ஜெயலலிதாவுக்கு கடைசி வரைக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் ஓபிஎஸ். அதனால் தான் முதல்வருக்கான இருக்கையில் கூட முழுதாய் உட்கார்ந்து விடாமல் நுனியில் அமர்ந்து பணிவுக்கே பணிவு காட்டினார். அன்றைக்கு அப்படி அம்மாவின் சொல்லைக் கேட்டு நடந்த ஓபிஎஸ் தான் தற்போது அமித் ஷாவின் சொல்லுக்கு ஆடுவதாக ஆதங்கப்படுகிறார்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தின் இயக்குநர்களாக அமித் ஷாவும் ஆடிட்டரும் இருந்ததாகச் சொன்னார்கள். அது தான் தொடக்கம். அதன் பிறகு, “பிரதமர் கேட்டுக் கொண்டதால் அதிமுக-வுடன் மீண்டும் இணைந்தேன்” என்றார் ஓபிஎஸ். ஒரு கட்டத்தில் அங்கிருந்து மீண்டும் விலக்கப்பட்ட போதும் பாஜக-வின் பேச்சையும் அமித் ஷாவின் பேச்சையும் ஓபிஎஸ் தட்டவில்லை.

    மூன்று முறை முதல்வராக இருந்த அவர், அமித் ஷா சொன்னதாலேயே மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரட்டை இலையை மூன்றா மிடத்துக்குத் தள்ளினார். அதன் பிறகாவது பழனிசாமி தன் மீது பரிவுகாட்டுவார் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை என்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். சரி, இனிமேலாவது சுயமாக முடிவெடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நல்லதொரு முடிவை எடுக்க பழனிசாமிக்கு ‘டிசம்பர் 15’ கெடுவை விதித்தார் ஓபிஎஸ்.

    கெடு முடிவதற்கான நாட்கள் நெருங்கிய நிலையில் தான், மீண்டும் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்தார் அமித் ஷா. பாஜக-வுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்தவர், அமித் ஷா அழைக்கிறார் என்றதும் டெல்லிக்குப் பறந்தார். டெல்லியில் ஓபிஎஸ்ஸுக்கு அமித் ஷா என்ன போதித்தார் என்று முழுமையாகத் தெரியாத நிலையில், அந்தப் போதனைகளை செயல்படுத்துவதுதான் இனி ஓபிஎஸ்ஸின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

    இதனிடையே, ஓபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து பலவிதமான ஊகங்கள் கிளம்பி இருக்கின்றன. “ஓபிஎஸ் தனிக்கட்சிக்கு தொடங்கு வதற்கு ஆசி வழங்கிவிட்ட அமித் ஷா, தேர்தலில் தங்களுக்கான கோட்டாவில் ஓபிஎஸ் கட்சிக்கும் இடமளிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இன்னொரு தரப்பிலோ, “ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் உள்ளே விட மறுக்கிறார் பழனிசாமி.

    தினகரனோ, பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்கிறார். இந்தச் சிக்கலை தவிர்க்க, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்யலாம் என்ற கண்டிஷனை அதிமுக-விடம் முன்வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா. அதுபற்றி எல்லாம் பேசுவதற்காகத்தான் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். எனவே, 15-ம் தேதி புதுக் கட்சி தொடங்கினாலும் அமித் ஷாவின் கட்டளையை மீறி புரட்சிகரமான முடிவு எதையும் எடுத்துவிடமாட்டார் ஓபிஎஸ்” என்கிறார்கள்.

    ‘தாயின்றி தவிக்கிறது தமிழகம்’ என்று ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னைக்குள் அதிமுக பிரமுகர் ஒருவர் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார். தமிழகம் தவிக்கிறதோ இல்லையோ… அதிமுக தலைகள் அமித் ஷாவிடம் சிக்கிக் கொண்டு ரொம்பவே தவிக்கிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘அகண்டா 2’ இன்று ரிலீஸ் இல்லை… ரசிகர்கள் அதிர்ச்சி!
    Next Article திமுக ஆதிக்கத்திற்கு செக்… தமிழக அரசியல் களத்தில் குதிக்கிறார் அமித் ஷா
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.