தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததாலும், தனது தொகுதியிலேயே மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாலும், தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தனது ராஜினாமா கடிதத்தைப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அவர் அனுப்பி வைத்தார். எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தேர்தல் களத்தில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து அவர் தனது பதவியைத் துறந்துள்ளார். ஆளுநர் தற்போது கேரளாவில் இருப்பதால், ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து முதலமைச்சராகத் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version