கூட்டணியில் இருந்து எந்த கட்சிகளும் விலகாதது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அசுர பலத்தை தரும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அப்படியே உள்ளன. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எதுவும், தவெக கூட்டணியுடனோ, அதிமுக கூட்டணியுடனோ சேரவில்லை.

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படக்கூடும் என அவ்வப்போது தகவல் வெளியாகி வரும் போதிலும், அதுபோன்ற ரிஸ்க்கை காங்கிரஸ், விசிக கட்சிகள் எடுக்க விரும்பவில்லை. மதிமுகவும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளது. இடதுசாரி கட்சிகள், அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. தவெகவுடன் அக்கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதுபோல கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் இருக்கவே விரும்புவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகியவை மட்டுமே இதுவரை அதிகாரபூர்வமாக இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. தேமுதிக, பாமக ஆகியவற்றின் நிலைப்பாடு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்த 2 கட்சிகளும் அதிமுக-பாஜக கூட்டணியிலேயே சேரக்கூடும் என கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால், இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது தேர்தல் நேரத்தில் எதிராெலிக்கக்கூடும் என்றும், சரிவர தேர்தல் வேளை பார்க்க மாட்டார்கள் எனவும் தெரிகிறது.

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து திமுக தலைமைக்கு நன்கு தெரியும் என்பதால், தற்போது உள்ள கூட்டணியை அப்படியே தக்க வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. திமுகவில் உள்ள சில தலைவர்கள் தேமுதிக தலைவர் பிரேமலதாவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் தெரிகிறது. அப்படி தேமுதிக கூட்டணிக்கு வந்தால், திமுக கூட்டணிக்கு மேலும் பலத்தை தரும் என கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version