Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»காரைக்குடி வேட்பாளர் பெயர் சஸ்பென்ஸ்… தனக்காக ரிசர்வ் செய்திருக்கிறாரா சீமான்?
    தேர்தல் 2026

    காரைக்குடி வேட்பாளர் பெயர் சஸ்பென்ஸ்… தனக்காக ரிசர்வ் செய்திருக்கிறாரா சீமான்?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8057712 seeman1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டத்துக்காரரான நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இம்முறை அந்த மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன் கூட்டியே நாதக வேட்பாளர்களை அறிவித்து வரும் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் ஏற்கெனவே மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

    எஞ்சிய ஒரு தொகுதியான காரைக்குடிக்கு மட்டும் இதுவரை அவர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதைவைத்து, அவர் இம்முறை காரைக்குடியில் களமிறங்கப் போவதாக தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.

    கடந்த 2016-ல் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 2021-ல் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு முறையுமே அவரால் வெற்றிபெற முடியவில்லை. இம்முறை எப்படியும் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் சீமான், அதற்காக காரைக்குடியை தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிவகங்கை மாவட்ட நாதக-வினர்.

    இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டே காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இம்முறை சொந்த மண்ணில் தான் போட்டியிடுவேன்” என சூசகமாக தனது விருப்பத்தைச் சொல்லி இருந்தார் சீமான். அவரது சொந்த ஊரான அரணையூர் மானாமதுரை தொகுதியில் வருகிறது. அது தனித் தொகுதி என்பதால் அங்கு அவர் போட்டியிட வாய்ப்பில்லை.

    அதனால் அவர் காரைக்குடியை தேர்வு செய்திருக்கலாம் என்று சொல்பவர்கள், “கடந்த முறை காரைக்குடியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் துரைமாணிக்கம் 23,872 வாக்குகள் (11.24 சதவீதம்) பெற்றார். அப்போது காரைக்குடியில் அதிமுக-வும் திமுக-வும் நேரடியாகப் போட்டியிடவில்லை. அதற்குப் பதிலாக, பாஜக-வும் காங்கிரஸும் மோதின. காங்கிரஸ் வெற்றிபெற்றது.

    அதேபோல் இம்முறையும் இந்த இரண்டு கட்சிகள் தான் இங்கே மோதக் கூடிய சூழல் இருக்கிறது. தவெக தரப்பில் டாக்டர் பிரபு தான் வேட்பாளர் என தீர்மானிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாகவே அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    காலங்காலமாக இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கே விட்டுக் கொடுப்பதால் திமுக தரப்பில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சொல்லமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். இதேபோல், தங்களுக்கு வாய்ப்புள்ள இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுப்பதில் அதிமுக-வுக்கும் அவ்வளவு இஷ்டமில்லை.

    இப்படி இரண்டு முக்கியக் கட்சிகளிலும் இருக்கும் அதிருப்தியாளர்கள் நாதக-வை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என சீமானுக்கு யாராவது எடுத்துச் சொல்லி இருக்கலாம். அத்தோடு தவெக வேட்பாளர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்பதால் நாதக-வுக்கு குருட்டு யோகம் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் காரைக்குடிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் சீமான்” என்கிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!
    Next Article பட்டாபிஷேகத்துக்கு தயாராகும் உதயநிதி – பகிரங்கமாக சொன்ன திமுக..!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.