Close Menu
    What's Hot

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!
    Featured

    2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!

    Editor web1By Editor web1June 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    F2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் பல புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

    அமெரிக்காவின் ஹூஸ்டர் நகரில் குரூப் K பிரிவில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி போர்ச்சுக்கல் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரட்டை கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் பல உலக சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

    6 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர்:

    உலகக்கோப்பையின் நீண்டகால வரலாற்றிலேயே 6 வெவ்வேறு தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026) கோல் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே கால்பந்து வீரர் என்ற அசாத்தியமான சாதனையை 41 வயதான ரொனால்டோ படைத்துள்ளார்.

    உலகக்கோப்பை மற்றும் யூரோ கோப்பையில்  சாதனை:

    உலகக்கோப்பை மற்றும் யூரோ கோப்பை ஆகிய இரண்டையும் சேர்த்து, சர்வதேச அளவில் 11 முக்கிய கால்பந்து தொடர்களில் கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை ரொனால்டோ இதன் மூலம் படைத்துள்ளார்.

    போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல் (10) அடித்து முதலிடம்:

    உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக அடித்த 2 கோல்களின் மூலம், உலகக்கோப்பை தொடர்களில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்கள் (10 கோல்கள்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்தார். இதன் மூலம் 1966 உலகக் கோப்பையில் 9 கோல்கள் அடித்திருந்த புகழ்பெற்ற முன்னாள் ஜாம்பவான் யூசிபியோவின் நீண்டகால சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

    இரட்டை கோல் அடித்த 2-வது மிக சீனியர் வீரர்:

    தனது 41 வயது 138 நாட்களில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரட்டை கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கோல் (இரட்டை கோல்) அடித்த சீனியர் வீரர் என்ற சாதனையைப் ரொனால்டோ படைத்தார். ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் கோல் அடித்த சீனியர் வீரர்கள் பட்டியலில் கேமரூன் நாட்டின் ரோஜர் மில்லாவுக்கு (42 வயது 39 நாள்) அடுத்தபடியாக ரொனால்டோ 2வது பெருமையைப் பெற்றுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!
    Next Article அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    June 24, 2026

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    June 24, 2026

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

    2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.