Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!. ஆளுநர் அதிரடி அறிவிப்பு!
    Featured

    பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!. ஆளுநர் அதிரடி அறிவிப்பு!

    Editor web3By Editor web3May 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 day menstrual leave
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய அரசின் கொள்கை விளக்க உரையில் இந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    அரசின் ‘மாதவிடாய் கண்ணியம்’ (Project Menstrual Dignity) திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை பெண்களுக்கு உகந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில், விடுமுறையால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வார இறுதி நாட்களில் ‘சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மகப்பேறு நலச் சட்டத்தின்படி, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து பொது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப  பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பான, உயர்தர குழந்தைப் பராமரிப்பு மையங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.

    அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

    கேரளாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பொது கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், காலணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லாத கேரளா” என்ற இலக்கை அடைய, குழந்தை தத்தெடுப்பு பிரச்சாரங்கள் ஊக்குவிக்கப்படும். சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ், பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் நல்ல ஊதியம் பெறும் வளர்ப்பு குடும்பங்களின் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் முதல் அனாதைகள் இல்லாத மாநிலமாக கேரளா மாற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    கேரளாவை நாட்டின் மிகச் சிறந்த ‘பெண்களுக்கு உகந்த மாநிலமாக’ மாற்றுவதே இந்த அரசின் நோக்கம் என்று ஆளுநரின் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த முற்போக்கான அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?
    Next Article டாஸ்மாக் அவப்பெயரை மாற்றுவோம்;  படிப்படியாக ஊதிய உயர்வு!. அமைச்சர் விக்னேஷ் உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.