Close Menu
    What's Hot

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் அவப்பெயரை மாற்றுவோம்;  படிப்படியாக ஊதிய உயர்வு!. அமைச்சர் விக்னேஷ் உறுதி!
    Featured

    டாஸ்மாக் அவப்பெயரை மாற்றுவோம்;  படிப்படியாக ஊதிய உயர்வு!. அமைச்சர் விக்னேஷ் உறுதி!

    Editor web3By Editor web3May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister vignesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் பெற்றுக்கொண்டார். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், டாஸ்மாக் துறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை மாற்றி, அதனை ஒரு கண்ணியமான துறையாக மாற்ற அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

    தொடர்ந்து பேசிய அவர், வரும் ஜூன் மாதத்திற்குள் காலி மதுபாட்டில்களை ஊழியர்களே நேரடியாகக் கையில் வாங்கும் நிலை முழுமையாகத் தவிர்க்கப்படும். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. பாட்டில்களில் ஊழியர்கள் தனியாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை ஒழிக்கப்பட்டு, மதுபானத் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    மதுபாட்டில்களுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பாட்டிலுக்கான டெபாசிட் தொகை மட்டுமே வாங்கப்பட வேண்டும்; அதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் தொடங்கப்பட்டது, ஆனால் கடந்த 23 ஆண்டுகளில் இத்துறை தவறான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் ஊழியர்களின் குடும்பத்தினரும் ஏளனமாகப் பார்க்கும் சூழல் உள்ளது. இத்துறையில் உள்ள தவறுகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களின் நலனைக் கருதி, அவர்களுக்குப் படிப்படியாக ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல, டாஸ்மாக் துறையையும் மற்றவர்கள் மதிக்கும்படி ஒரு கண்ணியமான துறையாக மாற்றுவதே இலக்கு. அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த 8 நாட்களில், டாஸ்மாக் உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டுள்ளதாகவும், பார்களைக் கட்டுப்படுத்துவது எங்கு என்று அரசுக்குத் தெரியும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!. ஆளுநர் அதிரடி அறிவிப்பு!
    Next Article கவின் ஆணவப்படுகொலை வழக்கு.. தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கை..!! திருமா. பாராட்டு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    May 30, 2026

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    May 30, 2026

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.