Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!
    Featured

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    Editor web3By Editor web3June 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நேற்றுடன் (ஜூன் 10) பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்து, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு முன், 1952 முதல் 1964 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு தொடர்ந்து 4,398 நாட்கள் பதவியில் இருந்ததே சாதனையாக இருந்தது.

    இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி   தலைவர்களின் கூட்டத்தில், இந்த வரலாற்றுச் சாதனையைக் பாராட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த இத்தீர்மானத்தை நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ வழிமொழிந்தார்.

    இந்த பாராட்டு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இதை நான் ஒரு தனிநபர் சாதனையாகப் பார்க்கவில்லை. இது நமது கூட்டணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. எனவே, இந்தத் தீர்மானத்தை அர்ப்பணிப்புடன் உழைத்த பாஜாக தொண்டர்கள் உட்பட அனைத்து என்.டி.ஏ உறுப்பினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ‘நாடுதான் முதலில்’ என்ற எண்ணத்தோடு செயல்படும்போது, எந்தவொரு கடினமான முடிவையும் எடுப்பது எளிதாகிறது” என்றார்.

    கூட்டத்தில் அரசின் பொருளாதார சாதனைகள் குறித்துப் பேசிய பிரதமர், உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்தியா 2025-26 நிதியாண்டில் 7.7% வளர்ச்சி விகிதத்தையும், மார்ச் 31-டன் முடிந்த காலாண்டில் 7.8% வளர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

    மேலும், தனது 12 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது மற்றும் எளிய நேர்முக வரி முறை கொண்டு வரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, 2014-க்கு முன் நாட்டில் நிலவிய ‘தாழ்வு மனப்பான்மை மற்றும் விரக்திக்கு’ முற்றுப்புள்ளி வைத்து, என்.டி.ஏ புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், வடகிழக்கு மாநிலங்களில் அமைதி முயற்சிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற துணிச்சலான முடிவுகள் இந்த ஆட்சியில் சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    4399 days honour NDA leaders not a personal achievement not a personal feat pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    Next Article பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    June 11, 2026

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    June 11, 2026

    தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!

    பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.