Close Menu
    What's Hot

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு… நடப்பாண்டின் அதிகபட்ச எண்ணிக்கை!
    Featured

    தமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு… நடப்பாண்டின் அதிகபட்ச எண்ணிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025Updated:May 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0008
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 8,144 அரசு ஊழியர்கள் இன்று (மே 31, 2025) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். நடப்பாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

     

    தற்போது தமிழக அரசுத் துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவது வழக்கம். குறிப்பாக, மே மாதங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள்.

     

    இதற்கு முக்கிய காரணம், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டு நிறைவுபெறும் மே மாதத்தில் ஓய்வு பெறுவதே ஆகும். அந்த அடிப்படையில், இன்று ஓய்வு பெறும் 8,144 பேரில், குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப்-பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப்-சி பணியிடங்களில் 2,185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் அடங்குவர். கல்லூரிப் பேராசிரியர்கள் குரூப்-ஏ பிரிவிலும், பள்ளி ஆசிரியர்கள் குரூப்-பி பிரிவு ஊழியர்களாகவும் இருப்பார்கள்.

     

    இந்த 8,144 பேர் என்பது மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் இன்று 30 பேர் ஓய்வு பெறுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Government job Officers Retirement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகருப்பணசாமி கோவில் திருவிழா: ஆண்களுக்கான பிரமாண்ட கறி விருந்து!
    Next Article தமிழ்த் திரையுலகிற்கு உயிரூட்டிய தமிழக அரசுக்கு ஃபெப்சி நன்றி!
    Editor TN Talks

    Related Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    June 13, 2026

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    June 13, 2026

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.