Close Menu
    What's Hot

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!
    Featured

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    Editor web3By Editor web3June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india won
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.  இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    WTC புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படவில்லை. எனவே, இந்த அபார வெற்றிக்கு பிறகும் இந்திய அணியின் WTC புள்ளிப் பட்டியல் நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை; அது அப்படியே நீடிக்கிறது.

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் ஏன் WTC-ல் சேர்க்கப்படவில்லை?

    2025-27 உலக டெஸ்ட் போட்டி சுழற்சியில் மொத்தம் 9 முழுநேர உறுப்பு நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அவை, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ். ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து இருந்தபோதிலும், மற்ற நாடுகளைப் போல அவர்கள் அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதால் இந்த 9 அணிகளின் பட்டியலில் அவர்கள் இடம்பெறவில்லை.

    தற்போதைய புள்ளிப் பட்டியல் நிலவரம்: தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 6-வது இடத்தில் உள்ளது.  இந்தியா: 9 போட்டிகள் (4 வெற்றி, 4 தோல்வி, 1 டிரா) – 52 புள்ளிகள் (48.15%). ஆஸ்திரேலியா: 8 போட்டிகள் (7 வெற்றி, 1 தோல்வி) – 84 புள்ளிகள் (87.50%) பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்திய அணி தனது அடுத்த WTC டெஸ்ட் தொடரை வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்தத் தொடர் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பாக அமையும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா பங்கேற்கவுள்ளது. கடந்த முறைகளைப் போல இந்த முறையும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
    Next Article முட்டி மோதும் வல்லரசு நாடுகள்!. உலகில் அதிகரிக்கும் அணு ஆயுதப் போட்டி!. வெளியான ஷாக் ரிப்போர்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    July 28, 2026

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    July 28, 2026

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    முதலமைச்சர் அலுவலக இடமாற்றம்… பட்ஜெட் பணி பாதிக்கிறது… தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.