ஆவின் நிறுவனம் நெய் விலையை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில் ஆவின் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாக அளித்துள்ள விளக்கம் வருமாறு;-

ஆவின் நிறுவனம் நெய்யின் மொத்த விற்பனையாளர் (WSD) லாப வரம்பைக் குறைத்து, அதன் சில்லறை விலையை உயர்த்தியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை.

ஆவின் நிறுவனம், அனைத்து வகையான நெய்களையும் தற்போதைய சில்லறை விலையிலேயே நுகர்வோருக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு நெய் வகையின் விலையிலும் எந்த உயர்வும் செய்யப்படவில்லை.

மேலும், மொத்த விற்பனையாளர் (WSD) லாப வரம்பில் செய்யப்பட்ட திருத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது, முந்தைய லாப வரம்புக் கட்டமைப்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version