Close Menu
    What's Hot

    ஈரான் மீதான தாக்குதல் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைப்பு: டிரம்ப்

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»விமான நிலையங்களில் ‘அலர்ட்’!. எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா!. மத்திய அரசு அதிரடி!
    Featured

    விமான நிலையங்களில் ‘அலர்ட்’!. எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா!. மத்திய அரசு அதிரடி!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ebola india airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி எபோலா பாதிப்பால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த புதிய வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் 100 நபர்களில், சராசரியாக 30 பேர் மரணமடையும் அபாயம் இருப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் பதற்றம் நிலவினாலும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் எபோலா பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ‘தேசிய வைரலாஜி நிறுவனம்’ (NIV) எபோலா கண்டறிதலுக்கான முதன்மை ஒருங்கிணைப்பு ஆய்வகமாக மாற்றப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்க முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சிறப்புத் தனிமைப்படுத்தல் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் இந்தியாவில் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதே சமயம், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளையும், உண்மைக்குப்புறம்பான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!
    Next Article 5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    May 19, 2026

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீதான தாக்குதல் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைப்பு: டிரம்ப்

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    Trending Posts

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.