Close Menu
    What's Hot

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : கால்டாக்ஸி கூட்டமைபினர் ஆர்ப்பாட்டம்..! அரசாங்கமே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை..!
    Featured

    கோவை : கால்டாக்ஸி கூட்டமைபினர் ஆர்ப்பாட்டம்..! அரசாங்கமே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை..!

    Editor web4By Editor web4July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் OLA, UBER, RAPIDO போன்ற தனியார் செயலிகளுக்கு மாற்றாக தமிழ்நாடு அரசாங்கமே ஒருங்கிணைந்து டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும், இல்லையென்றால் அது தனியா நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், டாக்ஸிகளுக்கு பொது இடங்களில் போதிய பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக இயங்கக்கூடிய தனியார் கார் டாக்ஸி மற்றும் பைக் டேக்ஸிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    தனியார் வாகனங்கள் வாடகைக்கு செல்லும் பொழுது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வாறு தனியார் டாக்ஸிகளில் சென்றால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தனர். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள் பைக் டாக்ஸி அனுமதிக்கப்படுமேயானால் T Broad பதிவு பலகையை அந்த வாகனங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த தமிழ் டாக்ஸி செயலியை விரைந்து கொண்டு வர வேண்டும் அதற்கு முன்பாக அனைத்து டாக்ஸி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினரை அழைத்து பேசி அந்த டாக்ஸி செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு டேரிஃப் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை என்றால் தங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுவதாகவும் தொடர்ச்சியாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!
    Next Article டெங்கு தடுப்பில் புதிய மைல்கல்..!! முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்..!!
    Editor web4

    Related Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 21, 2026

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.