Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர் விவகாரம்!. நாடாளுமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு!. டி.ஆர். பாலு கண்டனம்!
    Featured

    காவிரி நீர் விவகாரம்!. நாடாளுமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு!. டி.ஆர். பாலு கண்டனம்!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament dmk mps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, திமுக எம்பிக்கள் வெளிநடப்புச் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி காவிரியில் தமிழகத்திற்குத் திறக்க வேண்டிய 7,000 கன அடி நீரை விடுவிக்க மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உரிமையையும் காக்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியதாவது, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேலும் 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இதுவரை ஒரு சொட்டு நீரைக் கூடத் திறக்கவில்லை. இது தமிழக விவசாயிகளின் சோகமான நிலையைக் காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை நாங்கள் நாடாளுமன்றத்திலும் தீவிரமாக எழுப்பி வருகிறோம்” என்றார்.

    மேலும், தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது நியாயமான தண்ணீருக்காகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார். அவரது தலைமையில் தஞ்சாவூரில் திரண்டுள்ள தமிழக விவசாயிகள் தண்ணீர் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய மேகதாது சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் குறித்தும், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதிக்கக் கோரி விதி 267-ன் கீழ் திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தார். அப்பணியை நிறுத்திவிட்டு மேகதாது அணை திட்டம் மற்றும் அது தொடர்பான தீர்ப்பாயம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Cauvery Water Cauvery Water News dmk mps Parliament
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாஸ் காம்போ உறுதி.. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 31’!
    Next Article கடலூர் : விசிக தலைவர் திருமாவளவன் காரில் தொங்கியபடி பயணம் செய்த விசிக நிர்வாகி… வைரலாகும் வீடியோ!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.