Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘ஜனநாயகன்’ முன்பதிவு தொடக்கம்: ஜூலை 23 ல் பிரம்மாண்ட ரிலீஸ்! 
    Featured

    ‘ஜனநாயகன்’ முன்பதிவு தொடக்கம்: ஜூலை 23 ல் பிரம்மாண்ட ரிலீஸ்! 

    Editor web2By Editor web2July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, வரும்  23 -ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் மக்கள் தலைவனாக உருவெடுக்கும் அரசியல் அதிரடித் திரைப்படமாகத் தயாராகியுள்ளது. இதில் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். சென்சார் வாரியத்தின் கடுமையான தணிக்கை நடைமுறைகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நேரிட்ட இணைய கசிவு   போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இத்திரைப்படம் ‘ஏ’  சான்றிதழுடன் தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.

    இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்பதிவு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

    முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அங்கு ஜூலை 23 அன்று காலை 6 மணிக்கே முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையிடப்பட உள்ளதால், எல்லையோரத் தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் டிக்கெட் முன்பதிவு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் மிக பிரம்மாண்டமான வசூல் சாதனையைப் படைக்கும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.

    cmvijay jananayagan JananayaganBooking
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!
    Next Article இந்தியத் துணை குடியரசுத் தலைவர் – சான்சிபார் அதிபர் சந்திப்பு… இரு நாடுகள் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை
    Editor web2
    • Website

    Related Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    July 19, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.