Close Menu
    What's Hot

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    டெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?
    Featured

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    Editor web2By Editor web2July 26, 2026Updated:July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chennai Metro
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு சமர்ப்பித்த திருத்தப்பட்ட திட்ட அறிக்கைகளை  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், பயணிகள் எண்ணிக்கை, பயண நேரச் சேமிப்பு மற்றும் மக்கள் தொகை அளவுகோல் எனத் தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அளித்த விளக்கங்களை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.

    காரணம் என்ன?

    7.5 கி.மீ தூரப் பயணத்தில் மெட்ரோ மூலம் 8 நிமிடங்கள் சேமிக்கப்படும் என்ற CMRL-ன் கணக்கீட்டை நிராகரித்துள்ள அமைச்சகம், நிலையங்களுக்கு நடப்பது மற்றும் காத்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் நேரச் சேமிப்பு எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை மாநகரப் பகுதியில் 15.84 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றும், 2017 மெட்ரோ ரயில் கொள்கையின்படி தேவைப்படும் 20 லட்சம் மக்கள் தொகை அளவுகோலை இவ்விரு நகரங்களும் எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேருந்து சேவை இல்லாத நிலையில் மெட்ரோ பயன்பாடு சாத்தியமில்லை எனக் கூறியுள்ள ஒன்றிய அரசு, மத்திய அரசின் ‘பிஎம் இ-பஸ் சேவா’ (PM e-Bus Sewa) திட்டத்தில் தமிழகம் இணையாததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    சென்னையின் மெட்ரோ கட்டம் 2 பணிகள் இதுவரை 54.62% மட்டுமே முடிவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சகம், சிறிய நகரங்களுக்குச் செலவு குறைந்த ‘பஸ் ரேபிட் டிரான்சிட்’ (BRTS) முறையே ஏற்றது எனக் கூறி இரு திட்ட கோப்புகளையும் திருப்பி அனுப்பியுள்ளது.

    முதலமைச்சர் விஜய் ஆய்வுக் கூட்டம் நடத்திய நிலையிலும், பிரதமருக்குத் தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையிலும் இந்த நிராகரிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    CoimbatoreMetro MaduraiMetro MoHUA TNGovt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
    Next Article டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!
    Editor web2
    • Website

    Related Posts

    டெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!

    July 26, 2026

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    July 26, 2026

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    டெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.