Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்
    Featured

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 congres
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை இணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ், மற்றும் அருணாச்சலம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது இணைத் தலைவர் எஸ்.கே.நவாஸ் கூறியதாவது;-

     முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த வழக்கில் பேரறிவாளனை குற்றவாளி என்று தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அவர் குற்றவாளி என்று உறுதி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது. கருணை அடிப்படையில் அவரது மரண தன்னை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துள்ளார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். நீதித்துறையும் பார் கவுன்சிலும் இதனை விசாரித்து உடனடியாக அவரது பதிவை ரத்து செய்ய வேண்டும்.

    முன்னாள் பிரதமரை கொலை செய்த ஒரு குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகப்பெரிய தவறு. பதிவு செய்வதற்கு முன்பு பார் கவுன்சில்  அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்.

    ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பார் கவுன்சில் இதனை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள் என நம்புகின்றோம்.

    பிரதமரை கொலை செய்த குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்ததை உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவாகவே பார்க்கின்றோம்.

    உடனடியாக பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் அணி முடிவு செய்துள்ளது.

    தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து அவர் பிரதமர் படுகொலையில் ஈடுபட்டு இருக்கின்றார். பேரறிவாளன் நிரபராதி என்று எந்த நீதிமன்றமும் உறுதிப்படுத்தவில்லை. இவர் தண்டனை குற்றவாளி என்று தான் உறுதிப்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

    பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கில் நாங்கள் முறையிடுவோம் என தெரிவித்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!
    Next Article ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.