நீதிமன்ற உத்தரவை விமர்சித்துப் பேசியதாக  தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை  கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை வேண்டுமென்றே மீறுவது போல தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அவரது இந்த நடவடிக்கை நமது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு எதிரான வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுகளுக்கு அவர் எந்த மரியாதையும் அளிக்கவில்லை.

நீதித்துறையை விட அரசாங்க அமைப்பு உயர்ந்தது என்றும், நீதிமன்றங்களின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை என்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

இதனை அனுமதித்தால் பொதுமக்கள் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். எனவே அவர் மீது சட்டப்படி அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version