Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன்..! ஒப்பந்த ஊழியர் கைது..!
    Featured

    வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன்..! ஒப்பந்த ஊழியர் கைது..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்கு என்ணும் மையக் கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்த்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    நடிகர் விஜய் தனது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தனது கடைசிப் படமாக ஜனநாயகன் இருக்கும் என அவர் அறிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி 9-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டது.

    படத்தில் வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    HD பிரிண்ட்டில் படத்தை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துவிட்டனர். இப்படத்தை டவுன்லோடு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகினும் படம் காட்டுத்தீயாய் மக்களிடம் பரவியது. படத்தை வெளிவிட்டது யார் என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார் சிலரை கைதும் செய்துள்ளனர்.

    மே 8-ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், வாக்கு எண்ணும்  மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக ஜனநாயகன் படத்தை பார்த்த சிசிடிவி மெயிண்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு ஜனநாயகன் படம் பார்த்ததாக அவரே புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒப்பந்த ஊழியரான யுவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,040 சரிவு!. நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!
    Next Article உஷார்.. ஓராண்டுக்கு மேல் வங்கி கணக்கை பயன்படுத்தவில்லையா? RBI-யின் அதிரடி எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.