Close Menu
    What's Hot

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்!. வானிலை ஆய்வாளர் கணிப்பு!
    Featured

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்!. வானிலை ஆய்வாளர் கணிப்பு!

    Editor web3By Editor web3May 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rain 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்  ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய வானிலை சூழலின்படி இம்முறை இரண்டு நாட்கள் தாமதமாக, ஜூன் 3-ஆம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பருவமழை தாமதமாக தொடங்கினாலும் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஜூன் 5-ஆம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழையைக் கொடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வாளர் தாமதம் ஏற்படும் என கணித்திருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என கணித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே மே 26-ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த மே 16-ஆம் தேதியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை சென்றடைந்துவிட்டது. இது வழக்கத்தை விட 6 நாட்கள் முன்கூட்டிய நிகழ்வாகும்.

    பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாகவே (சராசரியாக 92%) இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மதிப்பிட்டுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவதில் சில சவால்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇப்போவாது வாயைத் திறங்களேன்..! மேலிருந்து உத்தரவு வந்ததா? இபிஎஸ், உதயநிதியை விமர்சித்த காங். எம்.பி..!
    Next Article மேகதாது அணை விவகாரம் எதிரொலிக்குமா? இன்று பிற்பகல் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!
    Editor web3
    • Website

    Related Posts

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    June 13, 2026

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    June 13, 2026

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.