Close Menu
    What's Hot

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மேகதாது அணை விவகாரம் எதிரொலிக்குமா? இன்று பிற்பகல் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!
    Featured

    மேகதாது அணை விவகாரம் எதிரொலிக்குமா? இன்று பிற்பகல் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

    Editor web3By Editor web3May 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cauvery
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம், டெல்லியில் இன்று (மே 26) பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.

    மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என 2025ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் அனுமதித்துள்ளது என்று கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பான விவரம் நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற இணையத்தில் வெளியானது.

    இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ‘மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை திறந்த கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் கடந்த நவம்பர் 13 தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் சூழலில், இன்று நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடனும், தீவிரத்துடனும் செயல்பட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மேகதாது அணை திட்டத்திற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்!. வானிலை ஆய்வாளர் கணிப்பு!
    Next Article FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் இல்லை.. வரலாற்று அதிர்ச்சி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    June 13, 2026

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    June 13, 2026

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.