Close Menu
    What's Hot

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டம்: போலீஸ் தடியடிக்கு திமுக கடும் கண்டனம்
    Featured

    டெல்லி போராட்டம்: போலீஸ் தடியடிக்கு திமுக கடும் கண்டனம்

    Editor web2By Editor web2July 20, 2026Updated:July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annaarivalayam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர்.

    ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் தங்களது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மீது அரசின் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அநீதிக்கு எதிராக எழும் குரல்களை அடக்குமுறையால் ஒருபோதும் மௌனமாக்க முடியாது.

    தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள இளைஞர் எழுச்சியை அடக்குவதற்காக கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசுதல், இணைய சேவையை துண்டித்தல், மெட்ரோ நிலையங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    கல்விக்கும் நீதிக்கும் மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றி பெறட்டும். மாணவர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் தொடர்ந்து பறித்து வரும் நீட் தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளது.

    DelhiProtest DMK NEET StudentProtest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேத்துப்பட்டு இயற்கை எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
    Next Article மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    July 21, 2026

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.