Close Menu
    What's Hot

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி கைதால் கொந்தளிக்கும் தமிழகம்..!! போராடிய ஓபிஎஸ் அதிரடி அரெஸ்ட்..!!
    Featured

    உதயநிதி கைதால் கொந்தளிக்கும் தமிழகம்..!! போராடிய ஓபிஎஸ் அதிரடி அரெஸ்ட்..!!

    editor5By editor5August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினையை முன்னிறுத்தி திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதேபோல், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்ட மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, முதலமைச்சர் விஜயை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும் நடிகை ஒருவரைப் பற்றிய இரட்டை அர்த்தமான குறிப்புகள் சர்ச்சையை உருவாக்கின. இதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு நிலுவையில் இருக்கும்போதே தஞ்சாவூர் போலீசார் உதயநிதி ஸ்டாலினை அதிரடியாகக் கைது செய்தனர். அவருக்கு எதிராக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த எண்ணிக்கை ஒன்பது பிரிவுகளாக உயர்ந்தது.

    இந்தக் கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. சிலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகவும், போலீஸ் அராஜகம் நடைபெற்றதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டினர். தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    காவிரி நீர் பங்கீடு மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான இந்தப் போராட்டமும் அதைத் தொடர்ந்த கைதும் தமிழக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

    DMK O. Panneerselvam protest udhayanidhi arrest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தப்பிக்க முடியாது… உதயநிதிக்கு கனிமொழி கண்டனம்!
    Next Article உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!
    editor5

    Related Posts

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    August 4, 2026

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    August 4, 2026

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.