Close Menu
    What's Hot

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!
    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    Editor web3By Editor web3August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வர் விஜய் குறித்த உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்த பேச்சும், அரசின் கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்
    ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.

    தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் – ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    Anbumani Ramadoss arrest condemnable DMK TVK Udhayanidhi Stalin's speech
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதி கைதால் கொந்தளிக்கும் தமிழகம்..!! போராடிய ஓபிஎஸ் அதிரடி அரெஸ்ட்..!!
    Next Article உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    August 4, 2026

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    August 4, 2026

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.