Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குற்றச்சாட்டில் சிக்கினால் NO SEAT..! திமுக காட்டும் கறார்..! ஏற்பார்களா உடன்பிறப்புகள்?
    Featured

    குற்றச்சாட்டில் சிக்கினால் NO SEAT..! திமுக காட்டும் கறார்..! ஏற்பார்களா உடன்பிறப்புகள்?

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 02 28 at 7.33.46 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இம்முறை திமுக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தலைமையிடமும் தொகுதி மக்களிடமும் நல்ல பெயர் எடுத்து வெற்றி வாய்ப்பு 50%-த்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ‘சீட்’ என்பதில் உறுதியாக உள்ளதாம் திமுக தலைமை. எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

    அதன்படி, வருகின்ற சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெரும் முனைப்போடு தகுதியான வேட்பாளர்களை மட்டுமே களமிறக்க திட்டமிட்டுள்ள திமுக, அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ள உடன்பிறப்புகள் யார்? யார்? என்ற விவரத்தை சேகரித்துள்ளதாம். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்தவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டிய சட்டமன்ற உறுப்பினர் லிஸ்டையும் கூடவே எடுத்து வைத்துள்ளது திமுக தலைமை.

    தத்தமது தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடையே சம்பாதித்து வைத்துள்ள அதிருப்திகளும் அது தொடர்பான கருத்துக்களும் கூட பரிசீலிக்கப்படுகின்றன. அந்த வகையில் உள்ளூர் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், தொண்டர்களிடமும் நல்ல பெயர் வாங்காமல் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் பட்டியலும் தயாராகியுள்ளது. சட்டசபை வருகை பதிவு, தொகுதி பிரச்சனைக்கான கேள்வி கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை, தங்களது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியது போன்ற காரணிகளின் அடிப்படியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். இது வழக்கமான நடைமுறை என்றாலும் கூட முன்பு இருந்த தளர்வுகள் கூட இந்த முறை நிச்சயம் இருக்காது என்கிறது அறிவாலய வட்டார தரப்பு தகவல்.

    தற்போது பதவியிலிருக்கும் எம்.எல்.ஏ., க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து ஆளுங்கட்சியின் ‘சர்வே’ நிறுவனம் மேலிடத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில் “தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் 60 பேரின் வெற்றி வாய்ப்பு 50%-த்திற்கும் கீழ் இருப்பதாகவும் அவர்களுக்கு சீட் கொடுப்பது ஆபத்தானது” என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த சில மூத்த நிர்வாகிகள், “பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 60 பேர் பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து, சொத்து குவிப்பு, மணல் கடத்தல், சட்டவிரோத குவாரி தொழில் போன்ற குற்றசாட்டுகளுக்கு ஆளாகியவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க வாய்ப்பு குறைவு. ‘இந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தொகுதியில் வெற்றி வாய்ப்பு இழுபறி’ என சர்வேயில் கூறப்பட்டுள்ள உறுப்பினர்களில் சில பேர் அமைச்சராகவோ அல்லது மாவட்டச் செயலாளராகவோ இருந்தாலும் கூட அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம். அதற்கு மாற்றாக புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக” கிசுகிசுக்கின்றனர்.

    ஆக, மேற்கூறப்பட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான காரணிகளாக சொல்லப்பட்ட எதிர்மறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், “நீங்கள் சொல்லித்தானே செய்தோம்; உங்களுக்காகவும் தானே செய்தோம். இப்போது அதையே காரணமாக வைத்து ‘சீட்’ தரமாட்டோம் என்றால் அது எப்படி நியாயம். எங்களுக்கு சீட் வேண்டும்” என உள்ளுக்குள் போர்க்கொடி தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரபரப்பான அரசியல் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குகிறது திமுக – காங்கிரஸ்..! 25 தொகுதியா? 35 தொகுதியா?
    Next Article பொலிவியாவில் கரன்சிகளை ஏற்றி சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்து..! 15 பேர் உயிரிழந்த சோகம்..
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    July 4, 2026

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.