Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பரபரப்பான அரசியல் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குகிறது திமுக – காங்கிரஸ்..! 25 தொகுதியா? 35 தொகுதியா?
    Featured

    பரபரப்பான அரசியல் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குகிறது திமுக – காங்கிரஸ்..! 25 தொகுதியா? 35 தொகுதியா?

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PTI03 09 2024 000392A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசியல் களம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

    3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில், சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இக்குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், இம்முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும், கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்தாண்டு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். ஆனால் திமுக சார்பில் முதலமைச்சர் வரை ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

    இதற்கிடையில் விஜய்யின் தவெகவிடம் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், விஜய்யை சந்தித்தது உண்மை தான் எனவும் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையோ அப்படி ஒன்றும் நடக்கவில்லை. திமுக உடன் தான் கூட்டணியில் இருப்போம் என கூறினார்.

    இத்தகைய சூழலில் காங்கிரஸ் தரப்பில் இருந்து குறைந்தது 25 தொகுதிகளையும், அதிகபட்சமாக 35 தொகுதிகளையும் ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக சார்பில் கடந்தமுறை கொடுத்த அதே 25 தொகுதி உட்பட 1 மாநிலங்களை பதவியும் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும், இல்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவாகரத்து வழக்கு!.  விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு உத்தரவு!. நீதிமன்றம் அதிரடி!
    Next Article குற்றச்சாட்டில் சிக்கினால் NO SEAT..! திமுக காட்டும் கறார்..! ஏற்பார்களா உடன்பிறப்புகள்?
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.