Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’பெரியார் கொள்கைத் தலைவர்.. நீட் எதிர்ப்பு  பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்?’
    Featured

    ’பெரியார் கொள்கைத் தலைவர்.. நீட் எதிர்ப்பு  பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்?’

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dravidar Kazhakam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான  10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த  வாகனப் பிரசாரப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

     சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து நான்கு நாள் விழிப்புணர்வு பயணம் தொடங்க இருந்த நிலையில், அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் நடைபெற இருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

     பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், நீட் விலக்கு மற்றும் EWS இடஒதுக்கீடு ரத்து கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது ஏற்க முடியாதது என்றும், நீட் எதிர்ப்பு பிரசாரப் பயணங்களை கடந்த காலங்களில் பலமுறை நடத்தியபோதும் எந்த அரசும் அனுமதி மறுக்கவில்லை என்றும் கூறினார்.

     “முதலமைச்சர் தனது கொள்கைத் தலைவர் பெரியார் எனக் கூறும் நிலையில், சமூகநீதிக்கான இந்தப் பிரசாரப் பயணத்துக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்களை கூறுவதாக குற்றம்சாட்டினார்.

     மேலும், இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றத்திலும் அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி இருசக்கர வாகனப் பேரணியை நடத்துவோம் என்றும் கலி. பூங்குன்றன் தெரிவித்தார். EWS இடஒதுக்கீடு பிற சமூக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், அந்த இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

     

    DravidarKazhagam EWSReservation NEET tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் போட்டி: இன்னும் பல  பதக்கங்களை வெல்வோம் –  பி.டி. உஷா நம்பிக்கை!
    Next Article கோதாவரி ஆற்றில் சிக்கிய அரிய வகை ‘புலாசா’ மீன்!. 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.