Close Menu
    What's Hot

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!
    Featured

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    Editor web3By Editor web3June 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    france pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பிரான்ஸின் நைஸ்  நகரத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, தான் தங்கியிருந்த ‘ஹோட்டல் நெக்ரெஸ்கோ’ (Hotel Negresco) வந்தடைந்தபோது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரைக் காண ஏராளமான இந்தியர்கள் அங்கு குழுமியிருந்தனர். கைகளில் மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி “பாரத் மாதா கி ஜே”, “வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கூடியிருந்த அனைவரையும் சிரித்த முகத்துடன் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கியும், செல்ஃபிக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியர்களுடனான இந்த பிணைப்பு வலுவாகவே உள்ளது” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    பிரதமரின் வருகையைச் சிறப்பிக்கும் வகையில், ‘Echoes of Tradition, Spirits of Innovation’ என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து, இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான கதக், ஒடிஸி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக ஆடி பிரதமரை வரவேற்றனர். இந்த வண்ணமயமான நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி வெகுவாக ரசித்துப் பாராட்டினார்.

    தனது பயணத்தின் முதல் கட்டமாக, நைஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா – பிரான்ஸ் இடையேயான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

    மேலும், விண்வெளி, பாதுகாப்பு, மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய ஒப்பந்தங்கள். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை இரு தலைவர்களும் கூட்டாகத் தொடங்கி வைக்கவுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, எவியன்நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலும், பாரிஸில் நடைபெறும் ‘விவாடெக்’ தொழில்நுட்ப மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் பங்கை இந்த அரசு முறைப் பயணம் மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Indian diaspora Nice on France PM Modi receives warm welcome
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!
    Next Article 24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!
    Editor web3
    • Website

    Related Posts

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    July 19, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    July 19, 2026

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.