ன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் அருகே அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில், இதே திட்டத்தை “தென் தமிழகத்தை பாழ்படுத்தும் நச்சுத் திட்டம்” என்று கூறி எதிர்த்த கட்சி, தற்போது ஆட்சியில் இருந்து அதற்கான ஒதுக்கீட்டை நீட்டிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நச்சுத் திட்டம் என்று கூறிய திட்டம், தற்போது எப்படி நலத்திட்டமாக மாறியது? இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தாம் ஆதாரங்களுடன் குரல் கொடுத்ததையும் நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் “நச்சுத் திட்டம்” என்றால், அதை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version