Close Menu
    What's Hot

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!
    Featured

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    Editor web1By Editor web1July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Janaki 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ரஜினி காந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், எஸ்.ஜானகியின் தேன் போன்ற இனிமையான குரல் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்விக்கட்டும்; அவர் அமைதியில் துயில்கொள்ளட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

    Raji

    நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Kama

    கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில்

    கானக் குயிலே காலமானாயா?

    அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?

    ‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு?

    தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?

    ‘நாதம் என் ஜீவனே’ என்றாயே உன் நாதம் இருக்கிறது ஜீவன் இல்லையே

    சிரித்த முகமும் சிவப்பு நிலாப் பொட்டும் ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவதுபோல் செவ்வாய் அசைக்கும் அழகும் கண்களை விட்டுக் காணாமல் போகுமோ!

    நீ பாடமுடியாத பாடலென்று எதுவும் இல்லை உன் பாடல் கேளாமல் இரவுகள் விடிவதில்லை

    கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன்

    ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்’

    வாழ்க நீ அம்மா!

    என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!
    Next Article பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்
    Editor web1
    • Website

    Related Posts

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    July 11, 2026

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    July 11, 2026

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.