திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சந்தித்து பேசி உள்ளது பேசுபொருளாகியுள்ளது.

திமுக கூட்டணியில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை கேட்டு பெறுவோம் என தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை கூறிவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் முக்கிய தலைவர்கள், கூட்டணி இல்லை என்றால் விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். தான் எழுதியுள்ள ”பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை வழங்கி உள்ளார்.
தொடர்ந்து நடப்பு அரசியல் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version