Close Menu
    What's Hot

    உலக இரத்த தான தினம் 2026!. இந்த நாள் எப்படி உருவானது?. வரலாறும்.. முக்கியத்துவமும்!

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!
    Featured

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    Editor web3By Editor web3June 14, 2026Updated:June 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ayatollah Ali Khamenei funeral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின்  உச்சத்தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கு அடுத்த மாதம் ஜூலையில் டெஹ்ரானில் நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சுமார் ஆறு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் அஞ்சலி நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பிரார்த்தனை மைதானத்தில் அலி காமெனிக்கான பிரியாவிடை மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 6-ல் மாபெரும் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் நடைபெறும். ஜூலை 7-ல் புனித நகரமான கோம் (Qom) நகரில் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 9 -ல் அலி காமெனியின் சொந்த ஊரான மஷாத்தில் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

    இறுதிச்சடங்கு தாமதத்திற்கான காரணம் என்ன?

    முன்னதாக, இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முகரம் மாதத்தின் தொடக்கத்தில்  இறுதிச்சடங்கை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கி.பி 680-ல் நடந்த கர்பலா போரில் கொல்லப்பட்ட இமாம் உசேனுக்கான வருடாந்திர துக்க அனுசரிப்பில் மக்கள் முழுமையாக ஈடுபட வசதியாக, அலி காமெனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை ஜூலை மாதத்திற்கு ஈரான் அரசு ஒத்திவைத்துள்ளது.

    அயத்துல்லா ருஹோல்லா கொமேனிக்கு பிறகு, ஈரானின் இரண்டாவது உச்சத்தலைவராக 1989 ஜூன் மாதம் பொறுப்பேற்றவர் 86 வயதான அலி காமெனி. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெருங்கும் அமைதி ஒப்பந்தம் : கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் போர் தற்போது முடிவுக்கு வரும் தருவாயை எட்டியுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே அமைதி ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூன் 14)கையெழுத்தாகும் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று சனிக்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட அவர், “நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அது கையெழுத்தான மறுகணமே ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச போக்குவரத்துக்காகத் திறக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும், ஞாயிற்றுக்கிழமையன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை ஈரான் நிராகரித்துள்ளது. அதேவேளையில், “அமைதி ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட தற்போது மிக நெருக்கத்தில் உள்ளது” என்பதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான நேரம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!
    Next Article உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 
    Editor web3
    • Website

    Related Posts

    உலக இரத்த தான தினம் 2026!. இந்த நாள் எப்படி உருவானது?. வரலாறும்.. முக்கியத்துவமும்!

    June 14, 2026

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    June 14, 2026

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக இரத்த தான தினம் 2026!. இந்த நாள் எப்படி உருவானது?. வரலாறும்.. முக்கியத்துவமும்!

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.