மிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

ஆளுநர் அர்லேகர் அரசு உரையை எந்த மாற்றமுமின்றி ஆளுநர் வாசித்ததாகவே தெரிகிறது.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

2. தமிழ்நாட்டின் கடன் சுமையை கட்டுப்படுத்த நடவடிக்கை.

3. மத்திய அரசிடம் நிதி பங்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தப்படும்.

4. 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.

5. பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை அமைக்கப்படும்.

6. போதைப்பொருள் ஒழிப்புக்கு தனிப்படை உருவாக்கப்படும்.

7. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

8. சிறு, குறு விவசாயிகளுக்கு ₹75,000 வரை கடன் தள்ளுபடி.

9. கூட்டுறவு வங்கிகள் வலுப்படுத்தப்படும்.

10. கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம்.

11. இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்.

12. மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது.

13. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு எதிர்ப்பு தொடரும்.

14. தமிழுக்குரிய கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

15. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி.

16. உயர்கல்வியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

17. உதவிப் பேராசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறும்.

18. உயர்கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள்.

19. உலகத்தர கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

20. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க முயற்சி.

21. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தல்.

22. காவிரி நீர் உரிமை பாதுகாக்கப்படும்.

23. மேகதாது அணைத் திட்டம் தடுக்கப்படும்.

24. டெல்டா விவசாயிகள் நலன் காக்கப்படும்.

25. மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கோரப்படும்.

26. இலங்கையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பாதுகாப்பு.

27. மீனவர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்.

28. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள்.

29. ஈரநிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதுகாக்கப்படும்.

30. ஏரிகள், குளங்கள் பராமரிப்பு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும்.

31. மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.

32. தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

33. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை.

34. புதிய அணை கட்டும் கேரள முயற்சி எதிர்க்கப்படும்.

35. நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

36. கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகள் தொடரும்.

37. கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி.

38. மாணவர்களுக்கு பாரம்பரிய கல்விச் சுற்றுலா ஏற்பாடு.

39. நிலையான சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும்.

40. தமிழ்நாட்டை உலக பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்ற இலக்கு.

41. 2036-க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதார இலக்கு.

42. தொழில் தொடங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.

43. MSME தொழில்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி.

44. புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்படும்.

45. முதலீட்டாளர்களுக்கான சிறப்பு ஊக்கத் திட்டங்கள்.

46. ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ அமைக்கப்படும்.

47. வறுமையற்ற தமிழ்நாடு உருவாக்க இலக்கு.

48. அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

49. அரசுத் துறைகளில் AI மற்றும் e-Governance பயன்பாடு அதிகரிக்கப்படும்.

50. 69% இடஒதுக்கீடு, சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version