பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனும், சமூக ஊடகப் பிரபலருமான ஹர்ஷவர்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ, தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘#IOIO’ என்ற புதிய பாடலின் துடிப்பான ஹூக் ஸ்டெப் (Hook Step) நடனத்தை அவர் வெளியிட்டுள்ளார். “இந்த ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்பை கற்றுக்கொண்டு, உங்களின் சொந்த பாணியில் ரீல்ஸ் செய்து அசத்துங்கள். உங்களின் நடனப் பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ரசிகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
https://www.instagram.com/reel/DZehBSjyKNb/?igsh=MTd0cTU5NTA1cXhzaQ%3D%3D
இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப் நடன வீடியோவின் பின்னால் இருந்து உழைத்த முக்கியப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த நடன வீடியோவை ‘பிராண்ட் மேஸ்காட்ஸ்’ (@wearebrandmascots) நிறுவனம் தயாரித்துள்ளது. ராகுல் கிருஷ்ணா (@ragulkrishnaa) இந்த வீடியோவை இயக்கியுள்ளார்.
பிரதீப் முருகன் (@pradeep.murugan) இப்பாடலைத் தயாரித்துள்ளார். ரசிகர்களைக் கவர்ந்த இந்த ‘#IOIO’ ஹூக் ஸ்டெப் நடனத்தை அப்சர் (@apsarr_) வடிவமைத்துள்ளார். காட்சிகளைத் தரமாகவும் அழகாகவும் தேவானந்த் கணேசன் (@devanandganesan31) படம்பிடித்துள்ளார். கௌஷிக் (@kowshik_0103) இந்த வீடியோவின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஎஃப்எக்ஸ் (VFX) பணிகளை மாரி (@mari_r_7) மேற்கொள்ள, அதிநவீன ஏஐ எஃபெக்ட்ஸ் (AI Fx) காட்சிகளை கௌஷிக் மற்றும் தேவானந்த் கணேசன் குழுவினர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
சிறப்பான நடனம் மற்றும் நேர்த்தியான காட்சிகளால் கவரப்பட்டுள்ள ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், இந்த ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்பிற்கு தங்களது நடனப் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
