Close Menu
    What's Hot

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!
    Featured

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Greatest Cricketer of the Century
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    21-ம் நூற்றாண்டின் உலகளாவிய தலைசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிரபல விளையாட்டு ஊடகமான ESPN வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முன்னணி ஜாம்பவான்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் (Jacques Kallis) முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான ரேஸில் முதல் ஐந்து இடங்களில் முதலிடத்தில், ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா), 2வது இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிடித்துள்ளார். 3வது இடத்தில் விராட் கோலி, 4வது இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 5வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார்.

    உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட டாப் 25 சிறந்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சச்சின், கோலியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக விளங்கிய மேலும் 5 நட்சத்திர வீரர்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். அதாவது, ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி, ஜஸ்பிரித் பும்ரா, வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

    சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் திகழும் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த டாப் 25 பட்டியலில் இடம் பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இமாலய சாதனைகளைப் படைத்த ஜாக் காலிஸுக்கு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது கிரிக்கெட் உலகினரால் வரவேற்கப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்
    Next Article RCB-க்கு அடிக்குமா மெகா லக்? 2011 முதல் தொடரும் ‘குவாலிபையர் 1’ மேஜிக் சென்டிமென்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.