சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து நிலவிய இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. இரவிலும் வெப்பத்தின் புழுக்கம் காணப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டும், சென்னையில் மழைக்கான அறிகுறியே காணப்படாமல் இருந்தது.

இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், மாலையில் திடீரென இருள்மேகம் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. இதையடுத்து, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் பில்லர், வடபழனி, முகப்பேர், திருமங்கலம், அண்ணா நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயிலால் அவதிப்பட்ட மக்கள், தற்போது பெய்த கனமழையால் நிலவிய இதமான சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version