கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் புதிய மற்றும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர்களும் கள அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது தகுதியின் அடிப்படையில் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும்.

அதேபோல், முதல் கட்டமாக வட்டார அளவில் தீர்க்க முடியாத மனுக்கள் மற்றும் துணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் தீர்வு நடவடிக்கைகள் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்படும்.

இந்த இரு நிலைகளிலும் தீர்வு காணப்படாத கோரிக்கைகள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களின் நேரடிப் பார்வையில் பெறப்படும் மனுக்கள் மீது, மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண்பர்.

இவ்வாறு பெறப்பட்டு, பல்வேறு கட்டங்களாக உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்த முழு விவரங்களையும் உள்ளடக்கிய அறிக்கையைத் தவறாமல் மாதந்தோறும் அனுப்பி வைக்கவும் கூட்டுறவுத்துறை கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version