Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சர்வதேச அளவில் இந்தியா சாதனைகளை நிகழ்த்தியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்
    Featured

    சர்வதேச அளவில் இந்தியா சாதனைகளை நிகழ்த்தியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 PM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த ஒரு மாதத்தில் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்ப்பில் பெருமிதம் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வுகள் நடைபெற உள்ளன. பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த 20 எம்.பி.க்கள் இணைந்து உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சி (NCPI) முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பங்கேற்கிறது. அந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது.

    கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர்,  , கடந்த ஒரு மாதத்தில் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதத்தில் நாடு பல முக்கியமான சாதனைகளைப் பெற்றுள்ளது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியர்கள் பெருமைப்படக்கூடிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. விண்வெளித் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு ஒரு இந்தியர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய இளைஞர்கள் வழிநடத்தும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகில் சில நாடுகள் மட்டுமே சாதித்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது,” என்றார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “மழையாக இருந்தாலும், மழைக்கால கூட்டத்தொடராக இருந்தாலும், இரண்டும் சுறுசுறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் பெரும் பலன் அளிக்கும். எனவே, மழையும் சிறப்பாக பொழிய வேண்டும்; மழைக்கால கூட்டத்தொடரும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பின்வரும் முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:

    உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

    வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026

    விக்சித் பாரத் கல்வி அதிஷ்டான் மசோதா, 2025

    india India Global Achievements India's Growth International Recognition pm modi Prime Minister Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடப்பு கல்வியாண்டின் பொறியியல் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடக்கம்..! 
    Next Article சென்னை மாநகராட்சியில் ஊழல் – 15 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    July 20, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.