Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நடப்பு கல்வியாண்டின் பொறியியல் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடக்கம்..! 
    Featured

    நடப்பு கல்வியாண்டின் பொறியியல் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடக்கம்..! 

    Editor web4By Editor web4July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக தொடங்கியது.

    நடப்பு கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களில் 2.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களது தரவரிசைப்பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள்) இணையவழி கலந்தாய்வு கடந்த 13, 14-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன்மூலம் 137 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதன்பிறகு, சிறப்பு பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது.

    இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான இணையவழி பொதுக்கலந்தாய்வு ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று (20-ம் தேதி) தொடங்கியது. ஆக.30-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய இன்று காலை 10 மணி முதல் 22-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டும். அதை அவர்கள் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வழங்கப்படும். இதே முறையில் 2, 3-வது சுற்று கலந்தாய்வும் நடத்தப்படும்.

    முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது. 418 கல்லூரிகளில் 1,98,825தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை பொதுக்கலந்தாய்வின் முதல் சுற்றுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 22 வரை நடைபெறும். முதல் சுற்றில் பங்கேற்க பொதுப்பிரிவு கட் ஆஃப் 200 முதல் 171.333 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை 1 முதல் 37,976 வரை எனவும், அரசுப்பள்ளி 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ், மேற்கண்ட கட்-ஆஃப் மற்றும் தரவரிசை பெற்ற தகுதியான மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்கல்வி மாணவர்களள் பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி 7.5% ஒதுக்கீடு ஆகிய இரு பிரிவினரும் ஒரே சுற்றில் பங்கேற்கலாம்.

    சிறப்பு ஒதுக்கீட்டை பொறுத்தவரை,

    *மாற்றுத்திறனாளிகள்-258
    *விளையாட்டு வீரர்கள்-416
    *முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்-139.

    இந்த ஆண்டு TNEA 2026-ல் கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகள்-418 மொத்த என்ஜினியரிங் இடங்கள்-1,98,825 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக எம்.எல்.ஏ கைது..! அராஜக கைது நடந்துள்ளது..! இதெற்கெல்லாம் திமுக அசராது..!
    Next Article சர்வதேச அளவில் இந்தியா சாதனைகளை நிகழ்த்தியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்
    Editor web4

    Related Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    July 20, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.