இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரும், International IDEA உறுப்பு நாடுகளின் கவுன்சில் தலைவருமான ஞானேஷ் குமார், இன்று (ஜூலை 30) புதுடெல்லியில் உள்ள நிர்வாசன் சதன் அலுவலகத்தில், இந்தியாவிற்கான ஜார்ஜியா நாட்டின் தூதர் வக்தாங் ஜாவ்ஷ்விலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, IICDEM 2026 மாநாட்டில் உருவான புரிந்துணர்வின் அடிப்படையில், இரு நாடுகளும் ஜனநாயக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதியை மீண்டும் வெளிப்படுத்தின.
மேலும், தேர்தல் நிர்வாகம், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி, மற்றும் தேர்தல் தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
