சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் பொதுப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300 உதவித்தொகையும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகத்தின் அறிக்கையின்படி, தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை தேசிய அப்ரெண்டீஸ் பயிற்சி திட்டத்தின் (NATS) இணையதளமான https://nats.education.gov.in மூலம் வரும் ஆகஸ்ட் 28, 2026-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

இயந்திரப் பொறியியல், வாகனப் பொறியியல், சிவில் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்களும், B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A./B.C.M. உள்ளிட்ட பொதுப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பயிற்சிக்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version