சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் டாப் ஆர்டர் பேட்டர்களைத் தகர்த்தெறிந்தார். குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா என முன்னனி விக்கெட்டுகளை அவர் வீழ்த்திய விதம், இந்திய அணியின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 8 ஓவர்கள் வீசி, 2 மெய்டன்களுடன் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி நிதானமாக விளையாடி சதம் அடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினார். இருப்பினும் அவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு உதவியாக முகமது நபி (21 ரன்கள்) ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

பிரசித் கிருஷ்ணா 5விக்கெட்டுகள், குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஒத்துழைப்பு கொடுத்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை எட்டியது. இந்திய அணி இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா 1 ரன்களுடனும், ஜெய்வால் 16 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version