Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நடப்பது தவெக ஆட்சியா? திமுக ஆட்சியா – செந்தமிழன் சீமான் சீற்றம்
    Featured

    நடப்பது தவெக ஆட்சியா? திமுக ஆட்சியா – செந்தமிழன் சீமான் சீற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதைக் கும்பலால் செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? திமுக ஆட்சியா என செந்தமிழன் சீமான் சீற்றம் காட்டியுள்ளார்.

    சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளர்.

    போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

    நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

    திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ள சீமான்,

    இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு  உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article181-வது பிறந்தநாள் – அயோத்திதாச பண்டிதருக்கு முதலமைச்சர் மரியாதை
    Next Article 10-ஆம் வகுப்பு தேர்வு: தற்காலிக மதிப்பெண் பட்டியல் எப்போது?
    Editor TN Talks

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.