திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் இறுதி ஊர்வலம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற உதவிய தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் கே.பாக்யராஜ் குடும்பத்தினர் சார்பில் நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற “திரைக்கதை மன்னன்” அன்பு நண்பர் K. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் பாக்யராஜ் குடும்பத்தினர், பார்த்திபன் மற்றும் தனது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
