மாணவர்கள் நியாயமான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் என ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பாலன் இல்லத்தில்  தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றுகையில்,

இந்த நாட்டிற்கே வழிகாட்டியாக, போராட்டம் நடத்திய மாணவர்கள் மாறி இருக்கிறீர்கள். நாடாளுமன்றத்திலேயே வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் எல்லாம் கேட்க முடியாததை, அவர்கள் இடத்திற்கு சென்று பார்க்க முடியாத சூழலில், அரசாங்கமே வந்து பார்த்து போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.. இது மாணவர்கள் கிடைத்த மிக பெரும் வெற்றி. நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் போராட்டம் நடத்தியது அனிதா..

நாம் முதன்முதலில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவி இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய   புகழ் பெற்ற  மருத்துவமனைகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நீட் தேர்வு எழுதி அவர்கள் வரவில்லை தலைசிறந்த மருத்துவர்கள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள்.இவர்கள் ஆர்வம் இருப்பவர்கள் மருத்துவம் பயின்றவர்கள் ஆவர்.

தில்லியிலும் நடைபெறும் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கான இடைவெளி அவர்கள் நீட் முறையாக நடத்துங்கள் என்கிறார்கள்.. நாம் நீட் வேண்டாம் என போராடுகிறோம்.

நிச்சயமாக மத்திய அரசு வழிக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

நீட் வேண்டாம் என தொடர்ந்து போராடும் தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.தமிழ்நாட்டில் மதுரையில் மாணவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

டெல்லியில் இருக்கிறோமா தமிழ்நாட்டில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.பயத்தோடு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாணவர்கள் நியாயமான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் என ஆட்சியாளர்கள் உணர வேண்டும்

யார் உங்களுடன் கேட்கிறார்களோ இல்லையோ நாங்கள் (திமுக) உங்களுடன் நிற்போம்.எங்கு போராடினாலும் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் திமுகவும் நானும் உங்களுடன் எப்போதும் நிற்போம் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..

தமிழ்நாடு தொடர்ந்து நீட் ஒழிக்கப்பட வேண்டும் நீட் அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் எப்போதும் எடுத்துள்ளது.

திராவிட முன்னேற்றக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நீட் எதிராக  மசோதாவை அமைத்து அதனை சட்டம் ஆகவும் அமைக்க  உத்தரவு வழங்கினார்.

ஆனால் மசோதாவினை ஆளுநர் பெற மறுத்து இன்று வரை நிலுவையில் உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் நாடி உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

மாணவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

டெல்லியை போன்ற நிலை தமிழகத்திலும் நடைபெற்ற வருகிறது.இதனைக் கண்டு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழகமே நீட் தேர்வுக்கு எதிரான ஒரு மாநிலமாக இருக்கிறது  ஆனால் இன்றைய நிலையில் கட்சி அலுவலகத்தில் மாணவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

மற்ற இடங்களில் போராடிய மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர் அதனை நாமும் கண்கூடாக பார்த்துள்ளோம்.

தமிழகத்திலும் சரி டெல்லியில் சரி மாணவர்கள் அனைவரும் அற வழியில் தான் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் அறவழியில் செயல்படவில்லை .

இதுவரை மத்திய அரசு மாணவர்களை அழைத்துப் பேச தயாராக இல்லை மாணவர்களின் பிரதிநிதிகள்  அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக அவர்களின் மூன்றாவது கோரிக்கையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வைக்கும் என நம்புகிறேன்.

சில நேரங்களில் தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை பார்க்கும் பொழுது ஒரு பாடல்  நினைவுக்கு வருகிறது.  மௌனமான நேரம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

ஒருவேளை தமிழகத்திற்கு  மௌனமான நேரம் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version