Close Menu
    What's Hot

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர்: காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு திடீர் வலிப்பு! உறவினர்கள் தூக்கிச் செல்லும் வீடியோவால் பரபரப்பு!
    Featured

    கரூர்: காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு திடீர் வலிப்பு! உறவினர்கள் தூக்கிச் செல்லும் வீடியோவால் பரபரப்பு!

    Editor web1By Editor web1July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 19 07h12m19s551
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் அருகே கஞ்சா வழக்கு தொடர்பாகக் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கஞ்சா விற்பனையில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை வேலாயுதம்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, அந்த இளைஞர் திடீரென பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மற்றும் அங்கு வந்திருந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, இளைஞருக்குத் வலிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரைத் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடி வந்து, வாசலில் நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    vlcsnap 2026 07 19 07h11m49s461

    இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள காவல் துறை, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞருக்குக் கஞ்சா மற்றும் மதுப் பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

    இதனிடையே காவல் நிலையத்தில் இருந்து அந்த இளைஞரைப் பேச்சு, மூச்சற்ற நிலையில் அவரது உறவினர்கள் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸிற்கு ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
    Next Article ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இன்று இறுதி மோதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    July 19, 2026

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    July 19, 2026

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!

    CM விஜய் அலுவலக டேபிளில் கிறிஸ்து சிலுவை.. இதுதான் உங்க மதசார்பின்மை அரசா..?? பரபரப்பு விவாதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.