இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஜூலை 14ம் தேதி முதல் போட்டியும், ஜூலை 16ம் தேதி 2வது போட்டியும், ஜூலை 19ம் தேதி மூன்றாவது போட்டியும் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டே அவர் போட்டியில் பங்கேற்பார் என்பதை பிசிசிஐ தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
https://x.com/BCCI/status/2068606341132996613?
ஆப்கானிஸ்தான் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த போதிலும், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தொடரில் இந்திய அணியை சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் வழிநடத்தவுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
